சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏவின் மரணத்தைத் தொடர்ந்து ஈவிகேஎஸ். இளங்கோவன், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிப்., 5-ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த இடைத்தேர்தலை, அ.தி.மு.க., பா.ஜ., தே.மு.தி.க., கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், தி.மு.க., சார்பில், தி.மு.க., வேட்பாளர் களம் இறங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கட்சியும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் பொதுச் செயலர், புஸ்ஸி ஆனந்த், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தான் இலக்கு என, அக்கட்சியின் துவக்க நாளான முதல் நாளே, அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் உட்பட எந்தவொரு தேர்தலிலும் கட்சி இடைக்காலத் தேர்தலில் போட்டியிடாது. அதுமட்டுமின்றி, ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைத்தேர்தலில் ஆளும் அரசுகள் வெற்றி பெறுவது கடந்த கால வரலாறு. இதன் அடிப்படையில் தற்போது நடந்து முடிந்துள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை போன்று பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு இடைத்தேர்தலையும் புறக்கணித்து எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.