அமெரிக்கா: முதன்முறையாக ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம்… அமெரிக்கா அதிபர் தேர்தலில் முதன்முறையாக கமலா ஹாரிஸும், டிம் வால்ஸும் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸும், துணை அதிபர் வேட்பாளரான டிம் வால்ஸும், முதன்முறையாக ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்தனர்.
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் கூட கருக்கலைப்பு செய்ய முடியாதவாறு டிரம்ப் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கருக்கலைப்பு தடை சட்டம், தற்போது 20 மாநிலங்களில் அங்கு அமலில் உள்ளதாக கூறிய கமலா ஹாரிஸ், மீண்டும் டிரம்ப் அதிபர் ஆனால் நாடு முழுவதும் அந்த சட்டத்தை அமல்படுத்திவிடுவார் என்றார்.