சென்னை: சென்னை தி.நகர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீதான வழக்குகளில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை தி.நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தென்சென்னை வடமேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சத்யா மீது சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஆர்.பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இதில் வருமானம் ரூ. 2.64 கோடி சொத்து குவிப்பு மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 35 லட்சம் முறைகேடு நடந்த இந்த வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
எனவே, வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வில் கேட்கப்பட்டது.
இந்த வழக்குகளில் விசாரணை நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர் முனியப்பராஜ். 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உறுதியளித்தார்.
அதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.