சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட தேர்தல் பணிகளைக் கண்காணிக்க தொகுதிப் பார்வையாளர்களை நியமித்து திமுக தலைமை அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து திமுக தொகுதி உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 28-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். இதுகுறித்து, அக்கட்சி தலைமை வெளியிட்ட அறிக்கை:- தி.மு.க., தலைவர் தலைமையில், 2026 சட்டசபை தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, “சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்’, வரும், 28-ம் தேதி, காலை, 11.00 மணிக்கு, சென்னை, அண்ணா கழக, “கலைஞர் மண்டபத்தில்’ நடக்கிறது.
இக்கூட்டத்தில் அனைத்து தொகுதி பார்வையாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.