சென்னை: இனிவரும் காலம் இளைஞர்களுக்கான காலம்- என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலம், அறிவால் உலகை வெல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான காலம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க அடிக்கல், உயர்கல்வி, R&D, தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவை ஒருங்கிணையும் நிலப்பரப்பாக TamilNaduKnowledgeCity அமையும். நம் DravidianModel வானத்தை நோக்கிப் போடும் ஏணி இது!
மேலும், @Cambridge_Uni, IIT-M, மெல்பர்ன் பல்கலைக்கழகம், @Adobe முதலியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் & விருப்பக் கடிதங்களும் இந்தியா சர்வதேசக் கல்வி மாநாட்டில் கையெழுத்தாகின.
இனி வரும் காலம், அறிவால் உலகை வெல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான காலம்! வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.