மேற்கு வங்கம்: ஏ.ஐ. பயன்படுத்தி எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய மோசடி என்று முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி உள்ளார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பங்குராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது:
ஏ.ஐ. பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்படுகிறது. இது மிகப்பெரிய மோசடி. மேற்கு வங்கத்தில் பாஜக- ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்கக் கூடாது.
தேர்தல் வரும் நிலையில் சோனார் பங்க்ளா (Sonar Bangla) வாக்குறுதியை கொடுத்தார்கள். ஆனால், பெங்காலி பேசும் மக்கள் மற்ற மாநிலங்களில் தாக்கப்படுகிறார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது மேற்கு வங்கத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர். எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.