சென்னை : மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட்டதை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களை மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து X தளத்தில் பதிவிட்ட அவர், “சுகாதார வசதிகளை விரிவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்திய முதல்வரை காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
‘முதல்வர் மருந்தகம்’ திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பளித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், “உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகள்” என தெரிவித்துள்ளது