சென்னை : சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களின் நோன்பு காலம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் சார்பில் இன்று மாலை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு கஞ்சியை அருந்தினார்.
பின்னர் அவர், இந்தியாவிலேயே சிறுபான்மை மக்களின் சொந்த வீடு போல் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மக்களுக்கு இன்னல்கள் வரும்போதெல்லாம் முதலில் துணையாக நிற்பது திமுகதான் எனக் கூறிய அவர், ரமலானுக்கு வாழ்த்து சொல்வதை பார்த்தால் பலருக்கு கோபம் வரும். அப்படி வந்தாலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம் எனத் தெரிவித்தார்.