By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஒரே இரவில் உக்ரைனில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசிய ரஷ்யா..!!
    1 Min Read
    தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது…!!
    1 Min Read
    டிரினிடாட் மற்றும் டொபேகோ பிரதமருக்கு கும்பமேளா புனித நீர் பரிசளிப்பு..!!
    1 Min Read
    உக்ரைனுடனான போரை புடின் முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பில்லை: டொனால்ட் டிரம்ப்
    1 Min Read
    வான்வெளியை மீண்டும் திறந்த ஈரான்.. விமானங்கள் மீண்டும் தொடக்கம்..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உடைந்து போன நம்பிக்கையை மீண்டும் பெற என்ன செய்யலாம்?
    2 Min Read
    மகிழ்ச்சியை மட்டும் எதிர்பார்ப்பது திருமண வாழ்க்கையா?
    2 Min Read
    மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் பரவல்..!!
    2 Min Read
    வேகமாக வாகனம் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இழப்பீடு கோர முடியாது: உச்ச நீதிமன்றம்
    1 Min Read
    குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காததற்கு அபராதம் இல்லை: இந்தியன் வங்கி..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை ஆன்லைனில் எளிதாகத் திறக்க பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய சேவை
    2 Min Read
    மதுரை முருகன் மாநாட்டில் நிகிதா பங்கேற்பு மற்றும் மோசடி விவகாரம்
    1 Min Read
    தவெக செயற்குழு கூட்டத்தில் விஜய் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றம்
    1 Min Read
    ரிதன்யா வழக்கில் காங்கிரஸ் தலையிடாது – பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தருவோம்: செல்வப்பெருந்தகை
    1 Min Read
    பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை – தவெக தலைவர் விஜய் உறுதிபட அறிவிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விஜய்யின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கும் திமுக..!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > விஜய்யின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கும் திமுக..!!!
அரசியல் செய்திகள்

விஜய்யின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கும் திமுக..!!!

Periyasamy
Last updated: November 4, 2024 10:23 am
By Periyasamy 2 Min Read
Share
SHARE

சென்னை: தவெகவின் முதல் மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதற்கும், நேற்றைய கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்கும் விமர்சனங்கள் எழுந்தாலும், திமுகவினர் நேரடியாக பதிலளிக்காமல் நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக கடந்த பல மாதங்களாக அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் இலக்கு நிர்ணயிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கட்சியினரை அவ்வப்போது சந்தித்து பேசி வருகின்றனர். 2021 சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்கள் மட்டுமின்றி, இதற்கு முந்தைய பல்வேறு தேர்தல்களிலும் தமிழகத்தில் திமுக தனது இருப்பை உறுதியாக நிரூபித்துள்ளது.

விஜய் 69' பட அப்டேட் நாளை வெளியீடு: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு | vijay  starrer 69th movie update will be release on sep 14th 5 pm - hindutamil.in

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பலவீனத்தையும், தங்கள் கூட்டணியின் பலத்தையும் நம்பி அடுத்த தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வந்தது. இந்நிலையில்தான் நடிகர் விஜய் சமீபத்தில் தனது தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் நடிகர் விஜய் திமுகவை நேரடியாக விமர்சித்ததுடன், திமுக அரசியல் எதிரி என்றும் திராவிடர் கழகத்தை குறிப்பிட்டு பேசினார்.

கொள்கை அளவில் பாஜகவை எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். மேலும், திமுக கூட்டணி கட்சிகளிடையே ஆட்சிப் பங்கீடு தொடர்பாக சமீபகாலமாக சலசலப்பு நிலவி வரும் நிலையில், தங்களுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியைப் பகிர்ந்து கொள்ளும் என விஜய் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆனால், விஜய்யின் விமர்சனத்துக்கு அமைச்சர் எஸ்.ரகுபதியைத் தவிர திமுகவின் மற்ற முக்கியத் தலைவர்கள் யாரும் பெரிதாக எதிர்வினையாற்றவில்லை. அதைத்தொடர்ந்து நடந்த திமுக தேர்தல் பார்வையாளர்கள் கூட்டத்தில், நடிகர் விஜய்யை விமர்சித்ததை யாரும் பேச வேண்டாம், நாங்கள் பார்த்துக்கொள்வோம், அதனால் யாரும் பேச வேண்டாம் என முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனால், நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில், அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளையும், ஆளும் திமுக உள்ளிட்ட மக்கள் விரோத சக்திகளின் அணுகுமுறையையும் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தி.மு.க.,வின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:- தமிழகத்தில், தி.மு.க.,வின் முக்கிய எதிரி, அ.தி.மு.க., தான். விஜய் இப்போது முதல் மாநாட்டை நடத்தியுள்ளார். அதன் பிறகு செயற்குழு கூட்டத்தையும் நடத்தினார்.

அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு தலைமை பதிலளிக்கும். தற்போதைய சூழலில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் தலைமை இறங்கியுள்ளது. முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தங்களது சுற்றுப்பயணங்கள் மூலம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பிறகு, டிசம்பர் அல்லது ஜனவரி இறுதிக்குள் கட்சியின் நிர்வாக மாவட்டங்களில் பெரிய மாற்றம் ஏற்படும். இவ்வாறு கூறினார்கள்.

You Might Also Like

நான் அன்புமணிக்கு தொண்டனாகவே செயல்படுவேன்: அருளின் திடீர் மனமாற்றம்

தார்மீக உணர்வே இல்லா எடப்பாடி பழனிசாமி… அமைச்சர் விமர்சனம்

திருப்போரூரில் வரும் 9ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்… எடப்பாடி அறிவிப்பு

பராக் ஓபாமா கண்டனம்: டிரம்ப் மசோதாவுக்கு மக்கள் எதிர்க்க வலியுறுத்தல்

வன்னியர் இடஒதுக்கீடு 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும்: அன்புமணி காட்டம்

TAGGED:ActivitiesconferenceCriticismசெயல்பாடுதேர்தல்கள்விமர்சனம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

பறந்து போ படம்: ரசிகர்களின் பாராட்டுகள் மற்றும் விமர்சனங்கள்

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?