சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார். இதன் காரணமாக, கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினையும் இரண்டு முறை சந்தித்தார். இந்த சூழ்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடி மூலம் ஓபிஎஸ்ஸுடன் ஒரு சந்திப்பை நடத்தி, அவரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.
எனவே, யாரும் அவருக்கு எதிராக பொதுவில் பேசவோ, சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிடவோ, அவரை விமர்சிக்கவோ கூடாது என்று பாஜக தலைமை தனது நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.