சென்னை: தேசிய கல்விக் கொள்கையை திணிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்பதை ஏற்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மாநில அரசின் உரிமைகளை மதித்து ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,401 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு நிதி வழங்குவது மத்திய அரசின் கடமை என்றும் அறிவுறுத்தியுள்ளார்..