அமெரிக்கா: கடும் எதிர்ப்பு… கமலா ஹாரிசை கடுமையாக விமர்சித்து பேசிய ஜேடி வான்ஸ்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசை குழந்தை பேறு இல்லாதவர் என்று குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான ஜேடி வான்ஸ் விமர்சித்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
2021-இல் குழந்தையில்லாத பெண்களிடமா அமெரிக்காவை ஒப்படைப்பது என்று பேட்டி ஒன்றில் ஜேடி வான்ஸ் எழுப்பியிருந்த கேள்வி தற்போது பேசு பொருளாகி உள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த நடிகை ஜெனீஃபர் அனிஸ்டன், வான்சின் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
டௌக் எமாஃப் என்ற விவாகரத்தான நபரை திருமணம் செய்துள்ள கமலா ஹாரிசுக்கு குழந்தை இல்லாத நிலையில், டௌக்கின் முதல் மனைவி கெர்ஸ்டின் மூலம் பிறந்த இருவரை கமலா வளர்த்து வருகிறார்.