சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து, தன் ஈடு இணையற்ற மக்கள் நலத்திட்டங்களால் தமிழக மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒப்பற்ற ஆளுமைக்கு தலைவணங்குகிறேன். பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் மக்களின் பாதையில் தொடர்ந்து பயணித்து, உயிரோடும், உணர்வோடும், உத்வேகத்தோடும் இருக்கும் புரட்சித் தலைவி “அம்மா” என்ற இதய தெய்வத்தை வணங்குகிறேன்.
அம்மா வழியில் மக்களின் குரலாக என்றென்றும் ஒலிப்போம். “அமைதியும், வளமும், வளர்ச்சியும் நிறைந்த” தமிழகத்தை உருவாக்குவதே அம்மாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.