சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் அறையில் எடப்பாடி பழனிசாமியை நைனார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான பிறகு, முதன்முறையாக சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நைனார் நாகேந்திரனும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசுகின்றனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் அறைக்கு சென்ற நைனார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற கொறடாக்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்து பேசினார். இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், நைனார் நாகேந்திரனும் சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்த கூட்டத்தின் மூலம் அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டாக இன்று சட்டசபையில் பொதுமக்கள் பிரச்சனைகளை எழுப்பி பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதாக அறிவிக்கப்பட்டு, இது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இரு கட்சிகளும் வெளிநடப்பு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.