சென்னை: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் இருந்த ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுகவை மீட்பேன் எனும் தர்மயுத்தம் தோல்வியில் முடிந்ததால் திமுகவில் இணைந்துள்ளார் ஓபிஎஸ். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஒருவர் 76 வருட வரலாறு கொண்ட திமுகவில் இணைவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிமுக, காங்கிரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் திமுகவில் இணைந்த வரலாறு உண்டு. திமுக வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஒருவரான ஓபிஎஸ் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்தது ஏன்? – ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
திமுகவில் மகிழ்ச்சியோடு இணைந்துள்ளேன். என்னை திமுகவில் இணைத்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. அதிமுகவின் தாய் கழகத்தில் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி வழியில் ஆட்சி செய்கிறார் மு.க.ஸ்டாலின். சர்வாதிகாரியாக, ஆணவத்துடன் இபிஎஸ் நடந்து கொள்கிறார். அதிமுக இனி வெற்றி பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. திமுக வாய்ப்பு தந்தால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.