சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் முன்னாள் ஐ.ஆர்.எஸ்., தமிழக வெற்றிக் கட்சியின் கொள்கை பிரச்சாரம் மற்றும் செயல் திட்டங்களை மேம்படுத்துவதற்காக பிரச்சார & கொள்கை பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்தின் வழிகாட்டுதலின்படி, எனது உத்தரவுகள் மற்றும் ஆலோசனையின்படி கட்சியின் கொள்கைகள் மற்றும் கொள்கை தொடர்பான செயல் திட்டங்களை அவர் நிறைவேற்றுவார்.

கட்சித் தோழர்களும், அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முயற்சிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் கூறினார்.
மேலும், “முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆர். ராஜலட்சுமி, முன்னாள் திமுக எம்எல்ஏ டேவிட் செல்வின், முன்னாள் அதிமுக எம்எல்ஏ டாக்டர் ஸ்ரீதரன், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறங்காவலர் டாக்டர் மரிய வில்சன், முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் சமீபத்தில் கட்சியில் இணைந்துள்ளனர். நிர்வாகிகள் அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.