சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல சிறப்புகள்… ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள்!
ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park)!
மகளிர் நலத் திட்டங்களுக்கு மகுடம் வைக்கும் திட்டம்தான் மகளிர் உரிமைத் தொகை. வரும் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன் வழங்கப்படும்.
ஊர்க்காவல் படையினருக்கு சமமான ஊதியம் மூன்றாம் பாலினத்தவருக்கும் தரப்படும். மகளிர் விடியல் பயணத் திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
வரும் நிதியாண்டில் 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.