புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் போஸ்டில், ‘‘பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் சீரழிந்து விட்டது. எதிர்க்கட்சிகளைப் பற்றி பொய் சொல்வதை விட, பிரதமர் மோடி தனது எதிர்கால தேர்தல் பேரணிகளில் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டும்.
நீங்கள் உருவாக்கிய பொருளாதாரக் குழப்பத்தைப் பாருங்கள். குறைந்த நுகர்வு, அதிக பணவீக்கம், விரிவடையும் சமத்துவமின்மை, குறைந்த முதலீடு மற்றும் தேக்கமான ஊதியம் ஆகியவற்றால் தத்தளிக்கும் இந்தியப் பொருளாதாரத்தை ஒரு பண்டிகை கொண்டாட்டத்தால் கூட உயர்த்த முடியவில்லை. 5 மறுக்க முடியாத உண்மைகள் உள்ளன.
உணவுப் பணவீக்கம் 9.2 சதவீதமாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 10.7 சதவீதமாக இருந்த காய்கறி பணவீக்கம் செப்டம்பரில் 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. நுகர்பொருள் வாணிபத் துறையில் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது. ஒரு வருடத்தில் விற்பனை வளர்ச்சி 10.1 சதவீதத்தில் இருந்து வெறும் 2.8 சதவீதமாக குறைந்துள்ளதாக அரசாங்கத்தின் நிதி அமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கை தெரிவிக்கிறது.
குடும்ப சேமிப்பு 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. “உணவுப் பணவீக்கம் அதிகமாக இருப்பதால், நுகர்வு வெகுவாகக் குறைந்துள்ளது.