நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மாஞ்சோலை எஸ்டேட் பிரச்னையில் அரசு தலையிட்டு அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இது குறித்து ராஜ்யசபாவில் பேசுவேன். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை கடற்படை நிறுத்த வேண்டும்.
இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதற்கு ஏற்கனவே ஒரு கோடி பேரிடம் கையெழுத்து சேகரித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.