சிதம்பரம் : சுற்றுலா தலங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் கடல் நீர் உட்புகாமல் தடுக்க ரூ.9 கோடியில் தடுப்புச் சுவர் கட்டும் பணிக்கு, வேளாண்மை மற்றும் வேளாண் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பேசிய அவர், “கடலூரில் பிச்சாவரம், சாமியார்பேட்டை, சில்வர் பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கான திட்டப்பணிகள் நடைபெற உள்ளன” எனத் தெரிவித்தார்.