சென்னை: பாமகவுடன் கூட்டணி என நான் கூறினேனா என்று திண்டுக்கல் சீனிவாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைக்கு வரும்போது பாமக எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோருடன் அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டே வந்தார்.
அப்போது “பாஜக, நம்ம (அதிமுக), அப்புறம் பாமக” என சிரித்துக்கொண்டே பேசி வந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது “நாங்க கூட்டணிங்க” எனச் சொல்லிச் சென்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று மதியம் திண்டுக்கல் சீனிவாசனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “பாமகவுடன் கூட்டணி என நான் யாரிடமும் கூறவில்லை. கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார்” என்று கூறிவிட்டு சென்றார்.