புதுடெல்லி: டெல்லியில் பிப்ரவரி இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வழங்குவது போல் டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். ‘டெல்லியில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே செயல்படுத்தப்படும். டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்பதில் உறுதியாக உள்ளோம். தேசிய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். டெல்லியிலும் நிறைவேற்ற உள்ளோம்’ என்றார்.