திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
2026 தேர்தலில் என்டிஏ கூட்டணி அமைக்க அனைவரும் முயற்சி செய்து வருகிறோம். ஜெயலலிதா ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நண்பர் வைத்திலிங்கம் வீட்டில் நடந்த சோதனையால், அமலாக்கத்துறை தன்னிச்சையாக செயல்படுவது உறுதி. வைத்திலிங்கம் சட்டரீதியாக போராடி வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியின் தவறுகளுக்காக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளார். அவருக்கு இரட்டை இலை சின்னம் இருப்பதால், அதை நம்பியவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். இரட்டை இலை வலுவிழந்துள்ளது.
இனிமேல் எடப்பாடி கனவில் தான் நடக்கும். 2026 தேர்தலுக்கு பின் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு முடிவுரை எழுதுவார். இவ்வாறு கூறினார்.