சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை:- சென்னையில் சமீபத்தில் 7 இடங்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவமும், செயினை பறித்து சென்ற சிறிது நேரத்திலேயே கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களை கைது செய்து என்கவுன்டர் செய்ததும் பாராட்டுக்குரியது.

எனவே, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.அருண் உடனடி நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்தது மிகவும் பாராட்டுக்குரியது. மேலும், இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க இந்த முயற்சி உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.