சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை:- உலக வறுமைக் குறியீட்டின்படி 127 நாடுகளில் 105-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பரிதாப நிலையைப் பார்த்தால், மக்கள் பசி, பட்டினியால் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணரலாம்.
ஆனால், மத்திய அரசின் பழிவாங்கும் போக்கை மீறி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் அயராத உழைப்பாலும், திறமையான நிர்வாகத்தாலும் தமிழகம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 9.69 சதவீத வளர்ச்சியை அடைந்து இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகம் வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. எனவே, மோடியின் பிரசார யுக்திகளுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் பலியாக மாட்டார்கள்.