உக்ரைன்: ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு மத்தியில் பாதுகாப்பு கருதி உக்ரைனுக்கு 20 மணிநேரம் ரயிலில் பயணித்து வந்தடைந்தார் இந்தியபிரதமர் மோடி. தொடர்ந்து அவர் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
பிரதமர் மோடி இன்று உக்ரைன் தலைநகர் கீவ் வந்தடைந்த நிலையில், அவருடன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக போலந்து சென்ற நிலையில், தலைநகர் வார்சாவில் அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க்-கை சந்தித்துப் பேசினார்.
இரு தலைவர்களும் சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுதல், சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளல், சர்வதேச நிறுவனங்கள் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டிருப்பது, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் விரைவான சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
ெதாடர்ந்து கீவ்வில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த மோடியை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தற்போதைய போர் சூழல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடந்த 1991ம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து சுதந்திரம் பெற்ற உக்ரைனுக்கு முதன் முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.