சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகைச்செல்வன், செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன் குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் செங்கோட்டையன் குறித்து பேசுவார். அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை இல்லை. சில சலசலப்புகளுக்கு அஞ்சும் கட்சி அல்ல அதிமுக. எத்தனையோ சோதனைகளை சந்தித்தாலும் உயர்ந்து நிற்கும் கட்சி அதிமுக. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.