சென்னை: விஜய்யை கைது செய்ய வேண்டுமென கூறுவதில் அர்த்தம் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
கரூர் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயர் இதுவரை சேர்க்கப்படாததால் அவரை கைது செய்ய வேண்டும் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க.விற்கும் அரசுக்கும் எதிராக திட்டமிட்டு சிலர் வெறுப்பை பரப்பி வருவதாக சென்னை விமான நிலையத்தில் நிலையத்தில் பேட்டியளித்த அவர் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிராக த.வெ.க நீதித்துறையை அணுக முயற்சித்திருப்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.