சென்னை: நடிகர் கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி எட்டு ஆண்டுகள் ஆகிறது.
கமல்ஹாசனின் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி, பிப்.21, 2018இல் தொடங்கப்பட்டது. 8வது ஆண்டுக்குள் அடியெடுத்து வைப்பதை வருகிற பிப்.21ஆம் தேதி விமர்சையாக கொண்டாடவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
அந்த தினத்தில் கமல்ஹாசன், தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து எழுச்சி உரையாற்றுகிறார். திமுக சார்பில் ராஜ்ய சபா MPஆக கமல்ஹாசன் நியமிக்கப்படுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.