சென்னை : மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
அரசியல் கூட்டம் அல்ல, நடிகரை பார்க்க வந்த கூட்டம் என்று தமிழிசை விமர்சனம் செய்துள்ளார்.
தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் விஜய் பேசுகையில், கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக எனவும் தெரிவித்தார். இதுபற்றி பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை, விஜய்யின் மாநாடு அரசியல் கூட்டம் போல் இல்லை.
ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டம் போல் உள்ளது என்று கூறினார். மேலும் கொள்கை எதிரி பாஜக என்று கூறும் விஜய், தனது கொள்கையை கூறவில்லை., பாஜகவை விமர்சிக்கும் விஜய் காங்கிரஸை விமர்சிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.