சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எக்ஸ்-தளத்தில் அதில், தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான, என் அருமை நண்பர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் இன்று நேரில் சந்தித்து நலமுடன் நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவை செய்ய வாழ்த்தினார்.

தமிழ்நாட்டு மக்களும், தமிழ் மொழியும், தமிழ்ப் பண்பாடும் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்து வரும் வேளையில், தனது முன்னோடிகளைப் போலவே தமிழகத்தைக் காக்கும் அரணாக உருவெடுத்தவர் ஸ்டாலின். பல்லாண்டு வாழ்க! இவ்வாறு அவர் கூறினார்.