சென்னை: தி.மு.க., பவள விழா பொதுக்கூட்டத்தையொட்டி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-
தீண்டாமைக் கொடுமை, ஆதிக்கத்தின் தொற்று நோய், ஏற்றத் தாழ்வு புற்று நோய்க்கு எதிராக 75 ஆண்டுகளாக தி.மு.க. திமுக என்றால் என்ன? ஒரே வரியில் சொல்லச் சொன்னால், ‘தமிழுக்கும், தமிழருக்கும் பங்கையும், மரியாதையையும் பிற சக்திகள் அழிக்க முயன்றால், தமிழர்களின் கவசம் அவர்களைத் தடுக்கும்’ என்பேன்.
மு.க.ஸ்டாலின் கையில் தி.மு.க மேலும் மெருகூட்டி இந்தியா முழுவதும் திராவிட சிந்தனைகள் ஒளிர்ந்தன. ஆபத்தான சித்தாந்தங்கள் நாட்டை ஆக்கிரமிக்க முயலும் போது, இந்திய அரசியலமைப்பைக் காக்கவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநில சுயாட்சியைப் பாதுகாக்கவும் கோட்டைச் சுவர் போல எழுந்து நிற்கும் இயக்கம் திமுக.
இந்தக் கோட்டை இருக்கும் வரை தமிழ்நாட்டில் இருந்து ஒரு செங்கல்லைக் கூட யாரும் எடுத்துச் செல்ல முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.