அமெரிக்கா: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளார். இந்நிலையில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பிரச்சார கூட்டங்களில் டொனால்டு டிரம்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இல்லத்தில் தனிமை படுத்திக்கொண்டதால், துணை அதிபர் கமலா ஹாரிஸ் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றிவருகிறார்.
டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால் பெண்களின் கருக்கலைப்பு உரிமையை பறித்து விடுவார் என விமர்சித்த கமலா ஹாரிஸ், டிரம்பின் குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான ஜே.டி.வேன்ஸ் என்பவரை தொலைக்காட்சி விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.