அவிநாசி: கள்ளக்குறிச்சியில் விசிக நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் பங்கேற்காதது ஏன் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவினாசியில் இன்று ரத்த தான முகாம் நடைபெற்றது. பிரதமரின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு 74 பேர் ரத்ததான முகாமில் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். இந்த முகாமை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ரத்த தானம் செய்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்பார்த்தபடி அந்நிய முதலீட்டில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக திருமாவளவனும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் நாடகம் ஆடுகின்றனர். ஏன் ஜெகத்ரட்சகன் மற்றும் டி.ஆர். பாலுவும் பங்கேற்கவில்லையா? முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை?
கள்ளக்குறிச்சி வேட்டையாடிய சம்பவத்துக்குப் பிறகு முதல்வர் அங்கு செல்லாமல் மாநாட்டிலேயே கலந்து கொண்டார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதை காட்டுகிறது.
அவர் எப்படி நடுநிலையாக இருக்க முடியும்? இத்தனை நாட்களாக பார்த்துக் கொண்டிருந்த சீமான் கூட்டணி அரசியலுக்கு முயற்சிப்பது போல் தெரிகிறது. கச்சா எண்ணெய் மிகவும் குறைந்த அளவில் உள்ளது, பெட்ரோல், டீசல் விலை இன்னும் குறைக்கப்படவில்லை என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
சர்வதேச போர் உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச நிலவரத்தை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலியத்துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் முடிவு செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.