சென்னை: தமிழக அரசியலில் மதிமுக, பாமக உள்கட்சி பூசல்தான் தற்போது பெரும் பேசும் பொருளாக உள்ளது. இந்த உட்கட்சி பூசலால் மூத்த தலைவர்களான வைகோவும், ராமதாசும் தவித்து வருகின்றனர்.
மகனுக்காக வைகோ, மகனுக்கு எதிராக ராமதாஸ் என்று உள்கட்சி மோதலில் ஈடுபட்டு வருவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான பனிப்போர் சுமார் ஒரு மாதமாக நீடித்துவரும் நிலையில், தற்போது மல்லை சத்யா வைகோ இடையே சண்டை வெடித்துள்ளது.
மகன் துரை வைகோ கையில் அதிகாரம் செல்வதை மல்லை சத்யா எதிர்ப்பதே இதற்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு ஓராண்டு கூட இல்லாத நிலையில் தமிழக அரசியலில் இந்த 2 கட்சிகளின் உட்கட்சி பூசல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.