சென்னை : தமிழக அரசியலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதே கூட்டணியில் தொடருமா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? என்ற கேள்விக்கு வைகோ பதில் அளித்துள்ளார்.
ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த வைகோ, பதவி கொடுப்பார்களா என்பதன் அடிப்படையில் கூட்டணி வைக்கவில்லை.
சித்தாந்த அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட்ட கூட்டணி எனவும் தெளிவுபடுத்தினார். மேலும் எந்தச் சூழலிலும் திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என்றும் வைகோ உறுதியளித்துள்ளார். திமுக கூட்டணியில் எவ்வித பிளவும் ஏற்படவில்லை என வைக்கக்கூடிய பதில் இருந்து தெரிய வருகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.