சென்னை: முதல் தவணைக்கூட வரவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?
“தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசின் ‘Samagra Shiksha’ திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 3 தவணைகளாக நிதி விடுவிக்கப்படும் மாநிலங்களில் ‘தமிழ்நாடு’ இல்லை. பொய் சொல்லிவிட்டு, அம்பலப்படும்போது அதுகுறித்த எந்த சஞ்சலமும் இல்லாமல் அடுத்த பொய்யால் ஈடுகட்ட நினைப்போரை மக்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள்”. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.