கோவை: கோவையில் இன்று நடைபெறும் மோடி தொழில் மகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழிசை சௌந்தரராஜன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மோடி தொழில் மகள் எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் கலந்து கொள்கிறேன். எப்பொழுதும் ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்வதாகவும் இது ஆக்கபூர்வமான நிகழ்ச்சி என்றும் தெரிவித்தார். நாங்கள் மோடியின் தொழில் மகள் திட்டத்தில் கலந்து கொள்கிறோம் அதேசமயம் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது, யார் அந்த சார் என்ற கேள்வி இன்னும் தொடர்ந்து வருகிறது என்று கூறினார்.
இதுபோன்று கவலை அளிக்கக்கூடிய சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் காசா போரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதற்கு மோடி தான் காரணம் என்றும் கூறுகிறார்கள் என்றும் தெரிவித்த அவர் இதிலிருந்து அவர்கள் அரண்டு போய் உள்ளார்கள் என்பது தெரிகிறது என தெரிவித்தார். கீழடிக்கு நிதியை ஒதுக்கியது பிரதமர் மோடி என்றும் நீங்கள் மத்தியில் இருக்கும் பொழுது எத்தனை தொல்பொருள்களை எடுத்து அங்கீகாரம் கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினார். தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருப்பவர் பிரதமர் மோடி தான் அதற்கு சிபி ராதாகிருஷ்ணன் ஒரு சான்று என கூறினார்.
தமிழுக்கு நாங்களும் தான் சொந்தக்காரர்கள் என தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன் தமிழுக்கு நீங்கள் மட்டும்தான் சொந்தக்காரர்கள் என்று கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஒன்று இருந்தது என குறிப்பிட்ட அவர் தேர்தல் ஆணையத்தால் கூட அங்கீகரிக்கப்பட முடியாத கட்சிகளில் நாற்பத்தி இரண்டில் ஒரு கட்சியாக அதனை நீக்கி உள்ளார்கள் என தெரிவித்தார். திராவிட கட்சிகளுக்கு எதிராக தான் அரசியல் வாழ்வை கொண்டு வருவேன் என்று கூறிய அவர் திமுக எதை கூறுகிறதோ அதனை கேட்க வேண்டும் அதற்கு அடிபணிய வேண்டும் என்றும் சுயநலத்திற்காக உங்களுடன் வந்த கட்சிகளை எல்லாம் அங்கீகாரம் இல்லாமல் செய்து விட்டு அவருக்கு ஒரு எம்பி பதவி கிடைத்தவுடன் திமுகவின் ஊதுக்குழலாக மாறிவிட்டார் என தெரிவித்தார். அது ஒரு சுயநல அரசியல் என்றும் பொதுநல அரசியலில் இருப்பது பாஜக மற்றும் எங்கள் கூட்டணி தான் தான் என்றும் தெரிவித்தார்.