சென்னை: தமிழகத்தில் சீர்கெட்ட சட்டம்- ஒழுங்கு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு, மின்கட்டண உயர்வு இவற்றையெல்லாம் கண்டித்து, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை 4ம் தேதி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.