நாக்பூர் : நாக்பூர் கலவரம் திட்டமிட்ட சதி என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
நாக்பூரில் நிகழ்ந்த கலவரம் திட்டமிட்ட சதிச் செயல் என மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கலவரம் குறித்து பேசிய அவர், அவுரங்கசீப்புக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க சாவா திரைப்படமே காரணம் என விளக்கம் அளித்தார்.
இக்கட்டான சூழலில் மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார். கலவரம் பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.