பீகார்: பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான இடங்களில் தேசிய கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
பீகாரில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 24 தொகுதிகளைக் கொண்ட சீமாஞ்சல் பகுதியில் 10 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது