தூத்துக்குடி: அவர் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அதைப் பாதுகாப்பதில் முதல்வர் எந்த அக்கறையும் காட்டவில்லை. பாஜக-அதிமுக கூட்டணியை விமர்சிப்பதில்தான் முதல்வரின் முழு கவனமும் உள்ளது. மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கிராமங்களில் குடிநீர் இல்லை.
திருநெல்வேலி நகரில் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர் இல்லை. முதல்வர் இதையெல்லாம் புறக்கணித்து தேர்தல் கூட்டணி பற்றி பேசி வருகிறார். தேர்தலில் தோல்வியடையும் என்ற அச்சத்தில் உள்ளார். சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன. எல்லாவற்றையும் பரிசீலித்த பிறகு, மத்திய அரசு இப்போது சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது.

பொதுக் கூட்டங்களிலும் சட்டமன்றத்திலும் ஆளுநரை தொடர்ந்து விமர்சித்து வந்த தமிழக முதல்வர், தற்போது ஆளுநருடன் அதிகாரப் போட்டி இல்லை என்று கூறியுள்ளார். அனைத்து எம்எல்ஏக்களும் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் கூறியிருப்பது, கடந்த 4 ஆண்டுகளாக யாரும் பணியாற்றவில்லை என்பதைக் குறிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.