நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேயர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ள அவர், தனது ராஜினாமா கடிதத்தையும், மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.
முன்னதாக, கோவை ஆணையர் கல்பனாவும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
கட்சியினர் மற்றும் அதிகாரிகளிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், இருவரையும் ராஜினாமா செய்ய திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.