சென்னை : திமுக அரசுக்கு காங்கிரசால் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சிகர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நிச்சயம் நடத்தி காட்டுவோம் என ராகுல் பேசியுள்ளது திமுக அரசுக்குத் தலைவலியைத் தந்துள்ளது.
தெலங்கானா மாநில அரசு செய்ததை ஏன் தமிழக அரசு செய்யத் தயங்குகிறது என அன்புமணி, சீமான் உள்ளிட்டோர் வினவுகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த யாருக்கு அதிகாரம் என்ற விவாதம் பேரவையிலும் நேற்று வெடித்தது.
இதை எப்படி கையாள்வது என திமுக தலைமை ஆலோசித்து வருகிறதாம். காங்கிரஸ் எம்பி ராகுலின் பேச்சு தற்போது திமுகவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.