சென்னை: அடுத்தது இந்த கட்சி… திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார் உள்ளார் மல்லை சத்யா.
ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் அக்கட்சியில் இருந்தும் மல்லை சத்யா நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய கட்சியின் பெயர் நவ.20-ந் தேதி அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னை அடையாறில் நடந்த கூட்டத்தில் மல்லை சத்யா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார். அவர் ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் ‘திராவிட வெற்றிக் கழகம்’ கட்சியுடன் இணைந்துள்ளனர்.
தி.மு.க.வில் அங்கம் வகித்த வைகோ, கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி ம.தி.மு.க. என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதே போன்று ம.தி.மு.க.வில் அங்கம் வகித்த மல்லை சத்யா துரை வைகோவுடனான மோதல் போக்கு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் அவர் திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.