திருமலை: ஜனசேனா கட்சியின் 11-வது ஆண்டு விழாவில் துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியதாவது:- ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பதும், கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் நம் நாட்டின் தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடிப்படை நோக்கத்தை அடைய உதவாது.

தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் இவர்கள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்? பாலிவுட்டில் இருந்து பணம் வேண்டும் ஆனால் ஹிந்தியை ஏற்க மறுக்கிறார்கள் – அது என்ன லாஜிக்?. மூன்று மொழிக் கொள்கையின் நோக்கம் மாணவர்களுக்கு பரந்த அளவிலான தேர்வுகளை வழங்குவது, தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பது மற்றும் நாட்டின் வளமான மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதாகும், என்றார்.