டெல்லி: கேரள மாநிலம் வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
நாளை மதியம் 12 மணிக்கு கல்பேட்டாவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக பிரியங்கா காந்தி இன்று மாலை வயநாடு வருகிறார். அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் செல்கிறார்.
முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு ஆதரவு தெரிவிக்க சோனியா காந்தியும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் நாளை வருகிறார்கள். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்; வயநாடு மக்கள் என் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளனர்.
வயநாடு தொகுதிக்கு பிரியங்கா காந்தியை விட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. வயநாடு மக்களின் தேவைகளுக்காக நாடாளுமன்றத்தில் பிரியங்கா குரல் கொடுப்பார்.
பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்யும்போது எங்களுடன் வருமாறு ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.