சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி சார்பில் புலம்பெயர்ந்தோர் தின நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு மாநில அமைப்புச் செயலர் எம்.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். இளைஞரணி டி.சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் பேசியதாவது:-
குடியேற்றத்தில் தொழிலாளர்களை அதிக அளவில் ஏமாற்றுபவர்கள் இடைத்தரகர்கள். குடியேற்ற சட்டத்தை உடனடியாக திருத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மோடி அரசு அமைதி காக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. எனவே, சப் ஏஜென்ட்களை உள்ளடக்கிய புதிய குடியேற்றச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
அதாவது தவறு செய்தால் அவர்களையும் கைது செய்யலாம் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு தலைவர் பொன்குமார் பேசினார். எம்எல்ஏ எம்.பிரபாகரன், ரியல் எஸ்டேட் தொழில் கூட்டமைப்பின் பொருளாளர் எஸ்.ஜெகதீசன், இணைச் செயலர்கள் பி.சிவக்குமார், சி.ராஜாராம், ஜெகமுருகன், இணைப் பொதுச் செயலர் எஸ்.இந்துமதி, அமைப்புச் செயலர் ஏ. ஜெ. நாகராஜ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.