சென்னை : தமிழக மாடல் தான் வளர்ச்சி மாடல் என்று தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக ஒரு மாநிலத்தின் வளர்ச்சி மாடல் இருக்க முடியும் என்றால், அது ‘தமிழக மாடல்’ தான் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
ஊழல், மதவாதம், வாரிசு அரசியல் ஆகியவை இங்கு பெரிய சவாலாக உள்ளதாகவும், மதவாதம் தலைதூக்கியதற்கு பாரதிய ஜனதா தான் காரணம் என்றும் சாடினார்.
நீண்ட அரசியல் பயணம் கொண்ட மு.க.ஸ்டாலினை வாரிசு அரசியலாக பார்க்க முடியாது எனவும், உதயநிதி அப்படி அல்ல என்றும் குறிப்பிட்டார். இவர் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சித் தலைவர் விஜய்யை சந்தித்து பேசியதும், அந்தக் கட்சியின் முதலாம் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.