பெங்களூரு: 1924-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி மகாத்மா காந்தி தலைமையில் பெலகாவியில் நடந்த மாநாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க நூற்றாண்டு விழாவை டிசம்பர் 27-ம் தேதி நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்தது. சிங், பெலகாவியில் நேற்று நடைபெற்றது. பெலகாவியில் ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியலமைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எம்பி பிரியங்கா காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வரும், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே. சிவக்குமார் மற்றும் மாநில அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். பெலகாவி சிபிஇடி மைதானத்தில் நடைபெற்ற மாநாட்டில் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், “ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் பெயர்களில் பாஜக விளையாடுகிறது. அம்பேத்கரை அவமதிக்க பாஜக முயற்சிக்கிறது.
பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் மசூதிகளுக்குக் கீழே கோயில்களைக் கண்டு பிடிக்கிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள்? இது நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தானது. அதற்காக வருத்தப்படுவார்கள், என்றார். நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரைக் கொடுத்த வரலாறு நமக்கு உண்டு என்றார் பிரியங்கா காந்தி. ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர்கள் நாங்கள் அல்ல. அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற உயிரை கொடுக்க தயாராக இருக்கிறோம்.
தீய அரசுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும். மக்களாகிய நீங்களும் எங்களுடன் போராடுவதில் உறுதியாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதித்தார். இப்படி ஒரு அரசையும், அமைச்சரையும் நாம் இதற்கு முன் பார்த்ததில்லை. அரசியல் சாசனத்தையும் அம்பேத்கரையும் அவமதிப்பதை பொறுத்துக் கொள்ளாதீர்கள். அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க உயிரைத் தியாகம் செய்ய முடிவு செய்ய வேண்டும் என்றார்.